
94 வயதான பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
1950-ல் 'ஷவுகாரு' படம் மூலம் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைத்துறை பங்களிப்பிற்காக 2022-ம் ஆண்டு இந்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர், கடைசியாக 2020-ல் வெளியான 'பிஸ்கோத்' படத்தில் நடித்திருந்தார்.