
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட படம் குறித்த கங்கை அமரனின் பேச்சு தொடர்பான சர்ச்சைகளுக்கு வெங்கட் பிரபுவும், சிவகார்த்திகேயனும் விளக்கம் அளித்துள்ளனர்.
வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில், சிவகார்த்திகேயன் தனக்கு சிறந்த நண்பர் என்றும், ஒரு தந்தையாக தனது மகனின் படம் தாமதமாகும்போது ஏற்படும் விரக்தி இயல்பானது என்றும், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் தனது பதிவில், வெங்கட் பிரபுவுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாகவும், தான் எப்போதுமே வெங்கட் பிரபுவின் ரசிகன் என்றும், இருவரும் ஒரே குடும்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.