
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகம் குறைந்துவிட்டதாகக் கிளம்பும் வதடிகளில் உண்மையில்லை என்று மைக்ரோசாப்ட் தலைவர் சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
ஏஐ மாடல்களின் வளர்ச்சி தேக்கநிலையை எட்டிவிட்டது என்ற வாதத்தை அவர் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்பத்தின் ஆற்றல் விரிவாக்கம் சீராக இயங்கி வருவதுடன், தர்க்கரீதியான சிந்தனை மற்றும் வணிகப் பயன்பாடுகளில் இது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதாக அவர் குறிப்பிட்டார்.