
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் 'அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள சுமார் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 104 குடும்பங்கள் பயனடைவார்கள்.
இத்திட்டத்திற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையிலிருந்து பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படும்.