
சீக்கியப் பேரரசின் கடைசி மகாராஜாவான துலீப் சிங், 1849-ல் பிரிட்டிஷாரால் பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார், அவர் இந்தியா திரும்ப பலமுறை முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டது.
அவரது குடும்பத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களைச் சேகரித்துள்ள பீட்டர் பன்ஸ், இளவரசி சோஃபியா மற்றும் கேத்ரின் துலீப் சிங்கின் வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார்.
இந்தக் கலைப்பொருட்கள் அடங்கிய 'தி லாஸ்ட் பிரின்சஸ் ஆஃப் பஞ்சாப்' கண்காட்சி, மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் நவம்பர் மாதம் வரை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.