
அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ் தோல்வியடைந்து வெளியேறினார்.
முதல் செட்டை 7-6 என மெத்வதேவ் வென்ற நிலையில், அமெரிக்காவின் பிராண்டன் நகஷிமா அடுத்த இரு செட்களை 7-6, 6-1 என வென்று வெற்றி பெற்றார்.
ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த டென்னிஸ் தொடரில், முன்னணி வீரரான மெத்வதேவின் தோல்வி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.