
அமெரிக்காவின் செயின்ட் லுாயிசில் நடக்கும் சின்க்பீல்டு கோப்பை செஸ் தொடரின் நான்காவது சுற்றில், பிரக்ஞானந்தா நெதர்லாந்தின் ஜோர்டான் வான் பாரீஸ்ட்டை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 71-வது நகர்த்தலில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தார்.
நான்கு சுற்றுகள் முடிவில் 2.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா தொடரின் டாப்-4 இடத்திற்குள் முன்னேறியுள்ளார்.