நடிகை ராஷ்மிகா மந்தானா பாரத் ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியாக நடிக்கும் 'எம் எஸ் எ லெகஸி ஆன் ஸ்கிரீன்' திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.