
சியோலில் நடைபெற்ற கொரியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா சாம்பியன் பட்டம் வென்றார்.
அஷ்மிதா சாலிஹா 14-21, 21-14, 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் ஹான் கியான்ஜியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பி.எஃப்.டபிள்யூ உலக டூர் சூப்பர் 300 போட்டியில் பட்டம் வென்ற 5-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.