
ராஜா கிருஷ்ணா மேனன் இயக்கத்தில் திரிஷா, ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி நடிக்கும் புதிய சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது.
பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், இயக்குநர் ராஜா கிருஷ்ணா மேனனின் முதல் தமிழ் திரைப்படமாகும்.
மர்மம் மற்றும் திகில் நிறைந்த கதையம்சம் கொண்ட இப்படத்தின் முதற்கட்ட பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.