
தென்னமெரிக்க நாடான பொலிவியாவின் லா பாஸ் மற்றும் எல் ஆல்டோ பகுதிகளில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகளில் பனி குவிந்துள்ளதால் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளதுடன், எரிபொருள் விநியோகமும் தடைபட்டுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பனிப்பொழிவு தொடரும் என்பதால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.