
ஐபிஎல் 2027 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 18 ஆண்டுகளாக தலைமை பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த ஸ்டீபன் பிளெமிங் விலகியதை அடுத்து, எம்.எஸ். தோனியின் பரிந்துரையின்பேரில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிஎஸ்கே வரலாற்றில் முதன்முறையாக ஒரு இந்தியர் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.