
நடிகர் அல்லு அர்ஜுன் விசாகப்பட்டினத்தில் உள்ள இனார்பிட் மாலில் தனது 'AAA Cinemas' மல்டிபிளக்ஸ் வளாகத்தை நேற்று திறந்து வைத்தார்.
இந்த வளாகத்தில் 8 திரைகள் மற்றும் 1,556 இருக்கை வசதிகள் உள்ளதோடு, இந்தியாவின் முதல் 70 அடி × 30 அடி அளவுள்ள எல்.இ.டி திரை நிறுவப்பட்டுள்ளது.
ஐதராபாத் அமீர்பேட்டையைத் தொடர்ந்து, ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆந்திராவில் இந்தத் திரையரங்கை அல்லு அர்ஜுன் விரிவுபடுத்தியுள்ளார்.