
நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் பயணம் மற்றும் சவால்களை விவரிக்கும் ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற 90 நிமிட ஆவணப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஏ.எல். விஜய் இயக்கும் இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார், மேலும் இப்படத்தை ஷாலினி அஜித்குமார் தயாரிக்கிறார்.
கோல்டன் டிரோபி ஃபிலிம் புரொடக்ஷன் வழங்கும் இந்த ஆவணப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.