
இஸ்ரோ இனி ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் பணியிலிருந்து படிப்படியாக விலகி, அந்தப் பொறுப்புகளை தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் ஒப்படைக்க உள்ளது.
எஸ்.எஸ்.எல்.வி. மூலம் தொடங்கிய இந்த மாற்றம், பி.எஸ்.எல்.வி. மற்றும் எல்.வி.எம்.3 ராக்கெட்டுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று இன்-ஸ்பேஸ் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார்.
இனிவரும் காலங்களில் இஸ்ரோவின் முதன்மைப் பங்கு ராக்கெட் உற்பத்தியாளராக இல்லாமல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பாக மட்டுமே இருக்கும்.