
தமிழகத்தில் காலியாக இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
மதுராந்தகத்தில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளும், தாராபுரத்தில் சத்யபாமா 66,841 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த பொதுத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற அ.தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், தி.மு.க. இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.