
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்று வரும் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஹர்மித் தேசாய், யஷஸ்வினி கோர்படே ஜோடி வெற்றி பெற்றது.
இவர்கள் 3-2 என்ற கணக்கில் தென் கொரியாவின் பார்க் கேங்கியான், லீ டேவுன் ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்குப் பதக்கம் உறுதியாகியுள்ளது.
கடைசியாக கடந்த 1954-ல் நடைபெற்ற தொடரில் இந்திய ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நிலையில், தற்போது 72 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் பிரிவில் பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.