
வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் ஆயுதத் தயாரிப்பு பிரிவு தளபதி ஃபாரெஸ் அல்-மஸ்ரி உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதலில், ஹமாஸின் சிறப்பு கமாண்டோ பிரிவான 'நுஜ்'பா' படை வீரர் முகமது அபு ஷாகியனும் உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் தனது ராணுவ வலிமையை மீண்டும் கட்டமைக்க முயன்றதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.