
தமிழகத்தில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டு, இனி லிட்டருக்கு ரூ.44 என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே ரூ.38-ல் இருந்து ரூ.41-ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.3 அதிகரிக்கப்பட்டு மொத்தம் ரூ.44-க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
தூத்துக்குடியில் ரூ.20,800 கோடியில் 1,600 மெகாவாட் அனல் மின் நிலையம் மற்றும் காஞ்சிபுரத்தில் ரூ.175 கோடியில் செமிகண்டக்டர் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.