
ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம், தனது புதிய 7 சீட்டர் எஸ்யுவி காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த கார் ரூ.17 லட்சம் முதல் ரூ.26 லட்சம் வரையிலான விலையில் 2027-ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 1.3-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அல்லது 36 கி.மீ மைலேஜ் தரும் 1.5-லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் இடம்பெற வாய்ப்புள்ளது.