
ஒளியின் மூலம் நரம்பு செல்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் ‘ஆப்டோஜெனிடிக்ஸ்’ என்னும் புதிய அணுகுமுறையைக் கண்டுபிடித்த கார்ல் டைசராட், பீட்டர் ஹேகமன், கேயார்க் நாகெல் ஆகிய மூன்று அறிவியலாளர்களுக்கு 2026ஆம் ஆண்டுக்கான உடலியல்-மருத்துவ நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றை செல் பாசியில் காணப்படும் ஒளிப்புள்ளியில் உள்ள ‘சேனல்ரோடாப்சின்-2’ புரதமே மூளையின் நரம்பு செல்களை ஒளியின் மூலம் கட்டுப்படுத்தும் இந்தப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புக்கு அடிப்படையாக அமைந்தது.
இந்த ஆப்டோஜெனிடிக்ஸ் தொழில்நுட்பம் மூலம் குறிப்பிட்ட நரம்பு செல்களை மட்டும் துல்லியமாக இயக்கவும் அவற்றின் செயல்பாட்டைத் தற்காலிகமாகத் தடுக்கவும் முடிவதால் புதிய சிகிச்சைகள் பிறக்க வழி ஏற்பட்டுள்ளது.