
மேகதாது அணை திட்டத்தைக் கண்டித்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காவிரி நதி நுழையும் பிலிகுண்டுலு பகுதிக்குச் சென்று காவிரியை வழிபட்டார்.
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக பிரேமலதா விஜயகாந்த் பிளாஸ்டிக் பாட்டிலில் காவிரி நீரை எடுத்து வந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தன் மீது தெளித்து வழிபாடு நடத்தினார்.