
என்ரிகா நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களில் செயற்கை சுவையூட்டிகள் கலந்திருப்பது உணவு பாதுகாப்பு ஆணைய சோதனையில் உறுதியானதால், அவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பட்டியலில் 10 பிராந்தி வகைகள் மற்றும் ஒரு ரம் வகை மதுபானங்கள் அடங்கும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மதுபானங்களை குடோன்களில் இருந்து சில்லறை விற்பனைக்கு அனுப்பவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என உரிமம் பெற்றவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.