
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லா மற்றும் செடிகுல்லா அடல் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.
இதற்கு முன்பு முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்சில் 504 ரன்களுக்கு ஆல் அவுட்டானதுடன், பிரெண்டன் டெய்லர் 131 ரன்களும், பிரியன் பென்னட் 128 ரன்களும் எடுத்தனர்.
மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 216 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.