
ஆசிய விளையாட்டு ஹாக்கி போட்டிக்கான மகளிர் அரையிறுதியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
இந்திய அணியில் இஷிகா சவுத்ரி 44-வது நிமிடத்திலும், கேப்டன் சலிமா டெடி 48-வது நிமிடத்திலும் கோலடித்து வெற்றியை உறுதி செய்தனர்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நடப்பு சாம்பியனான சீனாவை எதிர்கொள்கிறது.