
திபெத் பகுதியிலுள்ள நாக்சு நகரின் பாகென் கவுண்டி பகுதியில் வியாழக்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளதுடன், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக இதுவரை உயிரிழப்புகளோ அல்லது பெருமளவு பொருள் சேதாரங்களோ குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.