
தமிழகம் முழுவதும் உள்ள 40 நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரொக்கப் பணம் ரூ.1,37,8207 மற்றும் 'கூகுள் பே' வழியே பெறப்பட்ட ரூ.1.60 கோடி என மொத்தம் 1.73 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு மாவட்ட வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.