
நடிகர் தனுஷ் தான் பயின்ற சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு தனது சொந்த செலவில் 3 மாடி கட்டிடத்தை கட்டிக் கொடுத்துள்ளார்.
இந்த கட்டிடத்தின் திறப்பு விழாவில் தனுஷ், அவரது சகோதரிகள் மற்றும் 1999-ம் ஆண்டு அவருடன் படித்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் போது தனுஷ் தனது ஆசிரியர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.