
வாட்ஸ்-அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்கள் குறித்து மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்யுமாறு மெட்டா நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் மூலம் பகிரப்படும் தகவல்கள் வலிமையான குழுக்கள் மூலம் ஆராயப்பட்டு, அரசு விதித்த வழிகாட்டுதல்களின்படியே செயல்படுவதாக மெட்டா நிறுவனம் பதிலளித்துள்ளது.