
விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி 2' திரைப்படம், திரையரங்குகளில் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்த நிலையில் ஓடிடி தளத்திற்கு வருகிறது.
இயக்குநர் செல்லா அய்யா இயக்கிய இந்தப் படம், வருகிற ஜூலை 31-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படம், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.