இந்தியாவில் பயணிகள் கார் விற்பனை கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் இந்த ஜூலை மாதம் 33% உயர்ந்து, சுமார் 4.65 லட்சம் முதல் 4.7 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
ஜிஎஸ்டி 2.0, குறைந்த ரெப்போ விகிதங்கள் மற்றும் வருமான வரி நிவாரணம் ஆகியவற்றால் தேவை அதிகரித்ததாக மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாருதி சுசுகி 1,96,203 வாகனங்களை விற்று முதலிடத்திலும், டாடா நிறுவனம் 61,356 வாகனங்களை விற்று 55.3% வளர்ச்சியுடனும், ஹுயுண்டாய் 54,210 வாகனங்களை விற்று 23.3% வளர்ச்சியுடனும் உள்ளன.