
கோவையைச் சேர்ந்தவர்கள் 'ஹேஷ்பே' என்ற இணையதளம் வாயிலாக கிரிப்டோகரன்சி முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.146 கோடி மோசடி செய்தது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நித்தீஷ் குமார், அரவிந்த்குமார், தாமோதரன் மற்றும் சையது உஸ்மான் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக நடிகர், நடிகைகளைக் கொண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தியதும் மும்பை சொகுசு கப்பலில் மது விருந்து நடத்தியதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.