
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில், ஆர்த்தி கோரிய மாதம் ரூ.40 லட்சம் இடைக்கால ஜீவனாம்சத்தை சென்னை குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அதற்குப் பதிலாக மாதம் ரூ.3 லட்சம் இடைக்கால பராமரிப்பு தொகையை ஆர்த்திக்கு வழங்க ரவி மோகனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு மகன்களைச் சந்திப்பதற்கு ரவி மோகனுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.