
சென்னையில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1000 மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்காகக் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டு, அடுத்த நாளே அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது அரசின் தடுமாற்றத்தைக் காட்டுவதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அரசின் இந்த முடிவுகளுக்கு அதிகாரிகள் காரணமல்ல என்றும், கொள்கை முடிவு எடுக்கும் நிலையில் இருப்பவர்களே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
உலக வங்கியின் மொத்த செலவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பேருந்துகள் வாங்கப்படுவது மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைத் தனியார் மயமாக்கவே வழிவகுக்கும் என்பதால் அதை பாமக கடுமையாக எதிர்க்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.