
ஆஸ்திரேலியாவின் கியாமா பொது நூலகத்தில் 1872-ல் எடுக்கப்பட்ட 'ஏதென்ஸின் தொல்பொருட்கள்' என்ற புத்தகம் 150 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்மன்ஸ் என்பவரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தைத் தாமதமாகத் திருப்பித் தந்ததற்காக நூலக விதிகளின்படி 28,000 ஆஸ்திரேலிய டாலர்கள் (சுமார் ரூ. 18.7 லட்சம்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டைப் புனரமைக்கும் போது கண்டெடுக்கப்பட்ட இந்த புத்தகம், தனது அப்பாவின் தாத்தா வாங்கியிருக்கலாம் என சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.