
டொரண்டோவில் நடைபெற்ற கனடா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக் கஜகஸ்தானின் எலினா ரிபாகினாவை எதிர்கொண்டு இந்த வெற்றியைப் பதிவு செய்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் பென் ஷெல்டனும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரேசிலின் ரபேல் மேடோஸ்-ஆர்லண்டோ லஸ் ஜோடியும் சாம்பியன் பட்டங்களைக் கைப்பற்றினர்.