
துலீப் டிராபி அரையிறுதியில் 15 வயது 157 நாட்கள் ஆன வைபவ் சூர்யவன்ஷி 42 பந்துகளில் அரைசதம் கடந்து 58 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.
மத்திய மண்டலத்திற்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய வைபவ், தனது முதல் முதல்தர சதத்தை நெருங்கிய நிலையில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வைபவ் சிக்ஸர் அடிக்க முயன்று விக்கெட்டை இழந்ததை கேலரியில் இருந்த தேர்வுக் குழு உறுப்பினர்களான ஆர்.பி.சிங், அஜய் ரத்ரா மற்றும் எஸ்.எஸ்.தாஸ் ஆகியோர் அதிர்ச்சியுடன் கவனித்தனர்.