
கர்நாடக வனத்துறையினரால் ஆகஸ்ட் 15 அன்று சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்களின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் அந்தோணிசாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), குமார் (36) ஆகிய மூவர் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர், இவர்கள் மான் வேட்டைக்கும் தமக்கும் தொடர்பில்லை என கூறப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படாமல் 150 கி.மீ தொலைவில் உள்ள மைசூர் மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அன்புமணி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.