
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் சேவை நேரத்தை மாற்றியமைத்துள்ளது.
பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில், ரயில் சேவை காலை 6 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை முதல், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரு திசைகளிலும் ரயில்கள் இயக்கப்படும்.