
அடுத்த மாதம் இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமான இந்த டெஸ்ட் தொடர், புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள நியூசிலாந்துக்கும் 5-வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கும் முக்கியமானது.
இந்திய அணி பழிவாங்கும் யோசனையில் இருக்கலாம் என்றும், அனைத்து வடிவங்களிலும் இந்தியா மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது என்றும் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளார்.