
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் முக்கிய வீரர்கள் தொடர்ச்சியாகக் காயமடைந்து வரும் சூழலில், அவரது பணிக்காலம் குறித்து பிசிசிஐ மறுஆய்வு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நீண்டகாலமாக அணியின் மருத்துவக் குழுவில் பணியாற்றி வந்த அவர், வீரர்களின் காயம், மறுவாழ்வு மற்றும் போட்டிக்கான உடற்தகுதி ஆகியவற்றை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தார்.