
ரூ.2,000 வரையிலான யுபிஐ (UPI) பரிவர்த்தனைகளுக்கு எந்தவொரு வங்கியோ அல்லது சேவை வழங்கும் அமைப்போ கட்டணம் விதிக்கக் கூடாது என மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
2007-ஆம் ஆண்டின் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டத்தின் பிரிவு 10A வழங்கும் அதிகாரங்களின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
RuPay வழியிலான டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கும் பணம் செலுத்துபவர் அல்லது பெறுபவர் மீது நேரடியாகவோ மறைமுகவோ கட்டணம் வசூலிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.