
தலைமைச் செயலாளரின் நடவடிக்கை சட்டவிரோதமானது எனக் கூறி, அவரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சிபிஎம் பெ.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தங்கள் ஆதரவு காரணமாகவே இந்த அரசு நீடிக்கிறது என்று குறிப்பிட்ட பெ.சண்முகம், கம்யூனிஸ்டுகளைப் பற்றி தகவல்களைச் சேகரிக்கும் வட்டாட்சியரின் செயல் கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலாளரை மாற்றுவது முதல்வர் கையில்தான் உள்ளது என்று கூறிய அவர், மத்திய அரசின் அழுத்தத்திற்குப் பணிந்து செயல்படும் அதிகாரிகளை வைத்து ஆட்சி நடத்தப் போகிறீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.