
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட உத்தேசிக்கும் கர்நாடக அரசுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
இரு மாநில எல்லைக்கு அருகே 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தைக் கர்நாடகம் கட்டினால், உச்சநீதிமன்றம் நிர்ணயித்தபடி மாதாந்திர வாரியாக தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீர் கடுமையாக பாதிக்கப்படும் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி எவ்வித நேரடி தள ஆய்வுகளையும், தொழில்நுட்ப மதிப்பீடுகளையும் செய்வதையோ அல்லது அனுமதிகள் வழங்குவதையோ தவிர்க்க வேண்டும் என பிரதமரை அவர் வலியுறுத்தியுள்ளார்.