
பெல்ஜியத்தின் வாவ்ரே மற்றும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வின் நகரங்களில் 16 அணிகள் பங்கேற்கும் 16-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டிகள் இன்று தொடங்குகின்றன.
ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 16 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்கள் பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளன.
2014-ம் ஆண்டுக்கு பிறகு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான உலகக் கோப்பை போட்டிகள் ஒரே இடத்தில் இணைந்து நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.