
சட்டைப்பையில் மு.க.ஸ்டாலின் புகைப்படம் வைத்திருப்பது குறித்து சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்த நிலையில், திராவிட மாடல் திட்டங்களைச் செயல்படுத்தவே மு.க.ஸ்டாலின் படத்தை இதயப்பக்கத்தில் வைத்திருப்பதாக அவர் விளக்கம் அளித்தார்.
தேர்தல் அறிக்கையில் கூறியபடி உரிமைத்தொகை உயரவில்லை என்றும், பட்ஜெட்டில் அறிவிப்புகள் அதிகம் ஆனால் செயலாக்கத்துக்கான முதலீடுகள் குறைவு என்றும் அவர் குற்றம் சாட்டினார்.