
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு 2028 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட விருப்பம் இருந்தாலும், நாட்டின் அரசியலமைப்பு சட்டம் அதற்கு இடம் தராது என்று கூறியுள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பின் 22-வது திருத்த விதிகளின்படி, எந்தவொரு நபரும் இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்ற கடுமையான தடை அமலில் உள்ளது.
தனது அரசியல் ஆதரவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தாலும், சட்ட வரம்புகள் மிகவும் கடுமையாக இருப்பதால் தம்மால் மீண்டும் போட்டியிட முடியாது என்று டிரம்ப் வாஷிங்டனில் விளக்கியுள்ளார்.