
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ அமைத்து வரும் செயற்கைக்கோள் ஏவுதளத்தின் நிர்வாகப் பொறுப்புகளை தனியார் துறையிடம் ஒப்படைக்க இன்-ஸ்பேஸ் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
விண்வெளி துறையில் பங்கேற்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஏவுதல் சேவைகள் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான செலவில் 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனங்கள் ஏவுதளத்தின் இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.