
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை பெய்துவரும் சூழலில், சென்னையில் வானிலையைக் கண்காணிக்கும் ரேடார் கருவி தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயல்படவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வானிலை மையத்திலிருந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை அப்டேட்டுகள் செல்வது குறிப்பிடத்தக்கது.
இந்த ரேடார் பழுது காரணமாக நிகழ்நேர வானிலை நிலவரத்தைக் கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.