
நெல்லை மாவட்டம் கண்ணநல்லூர் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புகார் அளித்த பொதுமக்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் கல்லெறிந்து கொல்லப்பட்டார்.
வாக்குவாதம் முற்றியபோது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் மகாராஜன் மீது கல்லை எறிந்ததில் அவர் படுகாயமடைந்து சுயநினைவை இழந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.